அதிரடி ஆக்சன் ட்ரெய்லர் ரிலீஸ்..!!

 
1
1991 ஆம் ஆண்டு முதல் திரை உலகில் பயணித்து வருகின்றார் நடிகர் ஜூனியர் என்டிஆர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், ஸ்டூடன்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தனது பயணத்தை ஆரம்பித்தார்.

தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் மட்டுமே நடந்து வரும் இவர், தற்போது பாலிவுட் உலகிலும் கால் பதித்து 'வார்' என்ற படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கோலிவுட் பக்கத்திலும் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளார்கள்.

இந்த நிலையில், பிரபல இயக்குனரான கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் "தேவரா" திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து முடித்துள்ளார். 

இந்த படத்தின் இரண்டாம் பாக படப்படிப்பு பணிகளையும் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில், தற்போது அந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகை ஜான்விக் கபூர் முதன்முறையாக தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web