மீண்டும் நடிக்க வந்த நடிகர் அபபாஸ்... வெள்ளித்திரை இல்ல.. சின்னத்திரை..!

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். அவருக்கு நல்ல ரசிகர் பட்டாளமே இருந்தது. அவர் ரஜினியின் படையப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நிலையில் பின்னர் வாய்ப்பு இல்லாததால் வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.
அப்பாஸ் தற்போது சென்னைக்கு திரும்பி இருக்கிறார்..பல்வேறு சேனல்களுக்கும் சமீபத்தில் அவர் பேட்டி கொடுத்து இருந்தார்.அது அனைத்துமே இணையத்தில் வைரல் ஆகியது அனைவரும் அவரை கொண்டாட ஆரம்பித்தனர்..
மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தப்போவதாகும் அவர் கூறி இருந்தார்…இந்த தகவல் அவரின் ரசிகர்களை கொண்டாட வைத்தது…இந்நிலையில் தற்போது அப்பாஸ் சின்னத்திரையில் நுழைந்து இருக்கிறார். அவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஷோவில் கெஸ்ட் ஆக பங்கேற்று இருக்கிறார்.
இந்த இசை யுத்தம் தெறிக்க விட போகுது.. 😎
— Vijay Television (@vijaytelevision) August 24, 2023
சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 - வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... #SuperSingerJunior9 #SSJ9 #SuperSinger #VijayTelevision #VijayTV pic.twitter.com/dpKKtZ5ZVy