சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித்..!
Nov 25, 2023, 08:05 IST
மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், நடிகர் அஜித் சென்னை திரும்பியுள்ளார். அதாவது, ‘விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் அஜித் சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Thala #Ajithkumar Is Back To Chennai 😍🔥
— Kolly Corner (@kollycorner) November 24, 2023
That Walk ⚡👌 #VidaaMuyarchi pic.twitter.com/ho0Fd6ZzLO