நடிகர் அஜித் பிரேமலதாவிடம் தொலைபேசியில் பேச வில்லையாம்.. உண்மையை உடைத்த பத்திரிகையாளர்..!

 
1
சினிமாவிலும் அரசியலிலும் வெற்றி கண்டவர் கேப்டன் விஜயகாந்த்.பல வருடங்களாக உடல் நலக் குறைபாடு வந்த விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

ஆனால் அஜித் துபாயில் இருப்பதன் காரணத்தினால் விஜயகாந்த் மறைவிற்கு அவரால் வர முடியவில்லை எனவும் பிரேமலதா விஜயகாந்த்துக்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறியதாகவும் தகவல் ஒன்று பரவியது.

ஆனால் தற்போது பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னதாக வெளியான தகவல் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் அஜித் சென்னை வந்ததும் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

From Around the web