நடிகர் அஜித் வாங்கிய புதிய சொகுசு கார்... விலை என்ன தெரியுமா ?
Sep 14, 2024, 07:05 IST
விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார்.
கார், பைக்குகள் மீது தீவிர ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். சமீபத்தில் அஜித் பிறந்தநாளுக்கு அவரது மனைவி ஷாலினி டுகாட்டி வகை இருசக்கர வாகனத்தைப் பரிசளித்தார். கடந்த ஜூலை மாதம் தான் ரூ. 9 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் ஒன்றினை வாங்கினார்.
இந்நிலையில், போர்ஷே ஜிடி3 வகை கார் வாங்கியுள்ளார் அஜித். இந்தக் காரின் விலை சுமார் ரூ.4 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அஜித் குமார் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.