மகனின் நண்பர்களுடன் ஜாலியாக கிரிக்கெட் விடையாடிய நடிகர் அஜித் .. வைரலாகும் க்யூட் வீடியோ..!
![1](https://ciniexpress.com/static/c1e/client/77058/uploaded/597a18dbe60a15c942b5495cde25b71b.jpg)
நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன், போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
தற்போது, குட் பேட் அக்லியின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடிகர் அஜித் ஓய்வு நாளில் தன் மகனுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.