ஜாலியாக குழந்தைகளுடன் சைக்ளிங் சென்ற நடிகர் அஜித் குமார்..!

நடிகர் அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் அடுத்ததடுத்த படத்திற்கு ரசிகர்கள் காத்துள்ளனர்,அஜித் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி என்கிற திரைப்படம் உருவாக உள்ளது..இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது மகிழ் திருமேனி இயக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். படத்தின் பணிகள் விரைவில் துவங்க உள்ளது..
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாமல் இழுத்தடித்து வந்ததால் இப்படத்தை படக்குழு கைவிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது…இதையடுத்து சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர் விடாமுயற்சி கண்டிப்பாக உருவாகும் என சொல்லியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக வெளிநாட்டில் பைக் சுற்றுலா செய்து வந்த அஜித் அண்மையில் சென்னை திரும்பினார். இதனால் விரைவில் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.
சென்னையில் பள்ளிக் குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங் செய்தபோது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. அஜித்தோடு அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் சைக்கிளிங் செய்துள்ளனர்.
சைக்கிளிங் சென்றபோது அஜித் அவரது காதல் மனைவி ஷாலினியுடன் எடுத்த அழகான புகைப்படங்களும் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.
Mentoring the kids ❤️ #AjithKumar 🚲 pic.twitter.com/uUYicbeBS5
— Shalini AjithKumar (@ShaliniAjithK) August 26, 2023