டவ்-தே புயலால் நடிகர் அஜித் பட தயாரிப்பாளருக்கு ரூ. 2 கோடி இழப்பு..!

 
டவ்-தே புயலால் பாதிக்கப்பட்ட மைதான் பட செட்

மும்பையில் அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட செட்டை டவ்-தே புயல் சூறையாடியதால் தயாரிப்பாளர் போனி கபூருக்கு ரூ. 2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ள விபரம் தெரியவந்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி வரும் படம் ’மைதான்’. இதை அமித் ரவீந்தரநாத் ஷர்மா என்பவர் இயக்கி வருகிறார். சையல் அப்துல் ரஹீமாக அஜய்தேவ்கன் நடிக்கிறார். இந்தியில் நேரடியாகவும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்தும் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு மும்பையில் பிரமாண்டமான மைதானம் போன்ற செட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றன. அண்மையில் அந்நகரத்தில் வீசிய டவ்-தே புயலால் அந்த செட் பணிகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. புயல் பாதிப்புக்கு முன்னதாக அங்கு 40-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் பணியாற்றியுள்ளனர். நல்லவேளையாக புயல் வீசுகையில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட விலையில்.

இந்நிலையில் டவ்-தே புயலால் மைதானம் செட் சேதமடைந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் போனி கபூருக்கு ரூ. 2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போனி கபூர் தற்போது தமிழில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை தயாரித்து வருகிறார். கொரோனா பிரச்னை காரணமாக இப்படத்தின் பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web