நடிகர் அஜித்தின் டயட் சீக்ரெட்டை பகிர்ந்த பிரபலம்! மூன்றே மாதத்தில் 25 கிலோ குறைத்தது எப்படி?
மீண்டும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் அஜித், இன்னும் ஒன்பது மாதங்களுக்கு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் முழுக்க.. முழுக்க.. கார் ரேஸில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்தார்.
அஜித்தின் இந்த பேட்டி ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தாலும், எந்த ஒரு நடிகரும் செய்யாத மற்றும் மேற்கொள்ளாத ஒரு முயற்சியில் இறங்கியுள்ள அஜித், அதில் வெற்றி பெற வேண்டும் என அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர்.
அஜித் இன்னும் 9 மாதங்களுக்கு எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டார் என்றாலும், அடுத்தடுத்து இவர் நடித்து முடித்துள்ள விடாமுயற்சி மற்றும் 'குட்பேட் அக்லீ' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம், ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஒரு சில காரணங்களால் லைகா நிறுவனம் இந்த படத்தில் ரிலீசில் தாமதம் ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது. இதுவரை 'விடமுயற்சி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், அஜித்தின் மற்றொரு திரைப்படமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள, 'குட் பேட் அக்லீ' படம் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அஜித் தீவிர கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக, 3 மாதத்தில் சுமார் 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அஜித் எப்படி இந்த அளவுக்கு வெயிட்டை குறைத்தார் என்று பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருக்கும் நிலையில், இது தொடர்பாக வலைப்பேச்சு பிஸ்மி தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
அஜித்தின் எடை குறைப்பு குறித்து பேசி உள்ள பிஸ்மி, "அஜித் கடந்த மூன்று மாதங்களாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல்... வெந்நீர் மட்டுமே குடித்து வந்ததாகவும், உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் என்பதால் புரோட்டின் பவுடர்களும், வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளார். இதன் காரணமாகவே மிகவும் குறைந்த காலகட்டத்தில் பெரிதாக எந்த ஒரு உடற்பயிற்சியும் இல்லாமல் அஜித் தன்னுடைய உடல் எடையை குறைத்தார் என கூறியுள்ளார். குறிப்பாக அஜீத் இந்த மூன்று மாத காலமும் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்னரே இது போன்ற பயங்கரமான டயட்டை கடைபிடித்ததாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.