செல்பொனை பிடுங்கி ரசிகரை எச்சரித்த நடிகர் அஜித்..!

 
செல்பொனை பிடுங்கி ரசிகரை எச்சரித்த நடிகர் அஜித்..!

வாக்களிக்க வந்த இடத்தில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சித்த போது, அவருடைய செல்போனை பிடுங்கி நடிகர் அஜித் எச்சரிக்கை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரை நட்சத்திரங்கள், பல்வேறு விளையாட்டுத் துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.

திரை பிரபலங்களில் முதல் ஆளாக நடிகர் அஜித் வழக்கம் போல அவருடைய வாக்கினை பதிவு செய்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு மனைவி ஷாலினியுடன் காலை 6.30 மணிக்கு வந்துவிட்டார் நடிகர் அஜித்.

பொதுமக்களுடன் வரிசையில் நின்ற அஜித், ஷாலினியை பார்க்க அங்கே கூட்டம் கூடியது. உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அஜித், ஷாலினை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர். அப்போது அஜித்துடன் உள்ளே நுழைந்துவிட்ட ரசிகர் ஒருவர், அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றார்.

இதை கண்டு அதிருப்தி அடைந்த அஜித், உடனடியாக ரசிகரின் செல்ஃபோனை பிடுங்கி கொண்டார். பிறகு செல்ஃபி எடுக்க வேண்டாம் என எச்சரித்து அந்த ரசிகரிடமே செல்போனை திருப்பி கொடுத்தார் அஜித். அதை தொடர்ந்து காலை 6.55 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

நடிகர் அஜித் மற்றும் அவருடைய மனைவி ஷாலினி தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். கொரோனா காலத்தில் இருக்கும் நெருக்கடிகளை புரிந்துகொள்ளாமல் ரசிகர் நெருங்கி வந்து செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். இதனால் அஜித் கோபமடைந்ததாக தெரிகிறது. 
 

From Around the web