அரவிந்த் சாமியின் இரண்டாவது மனைவி இந்த பிரபலமா..??

நடிகர் அரவிந்த் சாமியின் இரண்டாவது மனைவி குறித்த விபரங்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது. அவருடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.
 
aravind samy

தமிழ் சினிமாவின் கொண்டாடப்படும் ஹீரோவாக இருந்தவர் அரவிந்த் சாமி. தன்னுடைய வணிகப் பணிகள் காரணமாக சில ஆண்டு காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார். 

தற்போது தொடர்ந்து படங்களில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். அரவிந்த்  சாமி நடிப்பில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’, ’சதுரங்க வேட்டை 2’, ’நரகாசூரன்’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகவுள்ளன. 

aravindh samy

கடந்த 1994-ம் ஆண்டு நடிகர் அரவிந்த் சாமி, காயத்ரி என்பவரை மணந்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக 2010-ம் ஆண்டு காயத்ரியை விவகாரத்து செய்தார் அரவிந்த் சாமி. இதையடுத்து 2012-ம் ஆண்டு அபர்ணா முகர்ஜி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் தனது இரண்டாவது மனைவியை வெளியுலகுக்கு அரவிந்த் சாமி அறிமுகம் செய்துவைக்கவில்லை. இதனால் அவர் எப்படி இருப்பார் என்றே யாருக்கும் தெரியாது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளார். தற்போது அந்த படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

From Around the web