சார்பட்டா 2 எப்போது..? ஆர்யா சொன்ன பதில் இதுதான்..!!
 

விரைவில் உருவாகவுள்ள சார்பட்டா இரண்டாம் பாகம் தொடர்பான அப்டேட்டை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளது ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.
 
aarya

தமிழில் கடந்த 2021-ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியான இந்த படம், தேசியளவில் சிறப்பான வரவேற்பை பெற்றது. 1970-ம் ஆண்டுகளில் வட சென்னை பகுதியில் பின்பற்றப்பட்டு வந்த குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. 

தமிழ் ரசிகர்களை கடந்த பல்வேறு மொழி ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடினர். இப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான துஷாரா விஜயன், ஒரே படத்தின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதேபோல இறங்கி கிடந்த ஆர்யாவின் மார்க்கெட் மீண்டும் உயரத்துக்கு சென்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சார்பாட்டா 2 படம் தயாராவதாக பா. ரஞ்சித் அறிவித்தார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இப்போதே படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் ’கொம்பன்’ முத்தய்யா இயக்கத்தில் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தில் நடித்துள்ளார் ஆர்யா. 

அதற்கான ப்ரோமோஷன் பணிகளுக்கு வேண்டி ஆர்யா கோவை சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சார்பாட்டா 2 தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆர்யா, சார்பட்டா 2’ படம் இந்த ஆண்டு இறுதியில் துவங்கும். தற்போது கதை உருவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன என்று கூறினார்.

இந்த செய்தி ரசிகர்களை பரவசம் அடையச் செய்துள்ளது. காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம், கிராமத்து ஆக்‌ஷன் பாணியில் தயாராகியுள்ளது. வெந்தது தணிந்தது காடு படம் மூலம் அறிமுகமான சித்தி இதானி, இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

மேலும், பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பெற்றுள்ள காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம், வரும் ஜூன் 2-ம் தேதி திரைக்கு வருகிறது. 
 

From Around the web