மீண்டும் ரொமான்ஸ் படத்தை கையில் எடுத்த நடிகர் அசோக் செல்வன்..! 

 
1

தமிழ் சினிமாவில் இருக்கும் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். தனது அபார நடிப்பு திறமையால் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவருக்கு தற்போது பல பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

அந்தவகையில் பாலாஜி கேசவன் இயக்கத்தில் அசோக் செல்வன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அவந்திகா இவர்களுடன் இப்படம் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்திருப்பதாகவும் கூறப்டுடுகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் அதன் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது.

அதன் படி இந்த படத்திற்கு ‘எமக்குத் தொழில் Romance’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது . இந்த டைட்டில் மற்றும் First Look போஸ்டரை பகிர்ந்து நடிகர் ஆர்யா படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

From Around the web