நடிகர் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனின் அழகிய மெஹந்தி விழா போட்டோஸ்..!

 
1

சமீப காலமாகவே வட இந்தியாவைப் போல் தமிழகத்திலும் திருமணத்திற்கு முன்பு மெஹந்தி மற்றும் ஹெல்தி போன்ற சடங்குகள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிலும் பிரபலங்களின் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம் கண்டிப்பாக கொண்டாட்டங்களுக்கும் அலப்பறைகளுக்கும் பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்.அந்த வகையில் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் திருநெல்வேலியில் உள்ள பண்ணை வீட்டில் அழகான முறையிலும் ப்ரம்மாண்டமாகவும் நடந்து முடிந்துள்ளது…இதில் குறிப்பிட்ட சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் நண்பர்கள், உறவினர்கள், போன்ற பலர் கலந்து கொண்டு தங்களின் வாழ்த்துக்களை இளம் நட்சத்திர ஜோடிகளுக்கு தெரிவித்தனர்…அந்த புகைப்படங்கள் வைரலும் ஆனது…

மேலும் விரைவில் சென்னையில் இவர்களின் திருமண வரவேற்பு நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணிநேரமாக கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வனின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர்களின் மெஹந்தி புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும்

From Around the web