மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளி விட்டாரா நடிகர் பாலையா..?

 
1

பிரபல தெலுங்கு நடிகர் விசுவாக் சென் மற்றும் அஞ்சலி நடித்த ’கேங்ஸ் ஆப் கோதாவரி’ என்ற திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நேஹா ஷெட்டி, நாசர், சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் கிருஷ்ண சைதன்யா இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ப்ரமோஷன் விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த போது விழா மேடையில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த பாலையா, அஞ்சலியை தோளை பிடித்து தள்ளிவிட்டார். அப்போது அஞ்சலி தடுமாறி கீழே விழப் போன நிலையில் சுதாரித்து அவர் நின்று கொண்டார். அவரது பக்கத்தில் நேஹா ஷெட்டியும் இருந்த நிலையில் அவர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் பாலையா ஒரு ஜோக் அடிக்க அதற்கு அஞ்சலி மற்றும் நேஹா ஷெட்டி ஆகிய இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

தன்னை தள்ளிவிட்டவர் என்று கூட பாராமல் பாலையாவின் ஜோக்கிற்கு அஞ்சலி சிரித்ததை அடுத்து அப்படி என்னதான் அவர் ஜோக் சொன்னார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே பாலையா பல மேடைகளில் நடிகைகளிடம் இதுபோன்று அநாகரீகமாக நடந்து உள்ளார் என்று குற்றச்சாட்டு உள்ள நிலையில் தற்போது அஞ்சலியை மேடையில் நின்று தள்ளிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதை அவரிடம் தட்டி கேட்கும் அளவுக்கு தெலுங்கு திரையுலகில் யாருக்கும் தைரியம் இல்லை என்பது தான் சோகமான ஒன்றாகும்.


 

From Around the web