”ஆம்... அதுதான் உண்மை” ரோபோ சங்கர் குறித்து போஸ் வெங்கட்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் ரோபோ சங்கர். இவருடைய அண்மைக் கால புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தன. எப்போது கட்டுமஸ்தான உடலுடன் இருக்கும் ரோபோ சங்கர், சமீபத்திய புகைப்படங்களில் மிகவும் உடல் மெலிந்துப் போய் இருந்தார்.
இதுகுறித்து பேசிய அவருடைய குடும்பத்தினர், ரோபோ சங்கர் நடிக்கும் புதிய படத்துக்காக உடல் எடை குறைந்திருப்பதாக கூறினர். ஆனால் அவருடைய முகம் மிகவும் சோர்வடைந்து இருந்ததால், அவருக்கு ஏதோ உடல்நிலை பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
இந்நிலையில் ரோபோ சங்கருடைய உறவினரும் நடிகருமான போஸ் வெங்கட் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரோபோ சங்கர் உடல்நிலை குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த போஸ் வெங்கட், ரோபோ சங்கருக்கு உடல்நலன் குன்றியிருப்பது உண்மை தான். யாருக்கு வேண்டுமானாலும் இது ஏற்படாலம் தானே. அப்படித்தான் ரோபோ சங்கருடைய உடலில் சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அதற்காக அவர் குறித்து எதிர்மறையான செய்திகள் வெளியாவதை ஏற்க முடியவில்லை. விரைவில் ரோபோ சங்கர் பூரண உடல்நலன் பெற்று, பழைய நிலைக்கு திரும்புவார் என்று போஸ் வெங்கட் தெரிவித்தார்.