எதிர்நீச்சல் சீரியலுக்கு குட்பை சொன்ன முக்கிய பிரபலம்- காரணம் இதுதான்..!!

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடருக்கு மிகப்பெரிய பார்வையாளர் வட்டம் உண்டு. கடந்த ஓராண்டுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை ’கோலங்கள்’ நாடகத்தை இயக்கிய திருச்செல்வம் தயாரித்து இயக்கி வருகிறார்.
இந்த நாடகத்தில் மதுமிதா. ஹெச், கனிகா, ப்ரியதர்ஷினி நீலகண்டன், ஹரிப்ரியா இசை, ஜி. மாரிமுத்து, கமலேஷ், விபுராமன், சத்யப்ரியா, சத்யா தேவராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் பரபரப்பான கட்டத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் எதிர்நீச்சல் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபலம், சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஆதிரைச் செல்வி கதாபாத்திரத்தின் காதலர் அருண் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சாணக்கியா. இவர்தான் தற்போது நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார்.
சீரியலில் தனது கதைக்கும் கதாப்பார்த்திரத்திற்கும் பெரிய முக்கியத்துவம் இல்லை என்று கருதி சாணக்கியா விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய கதாபாத்திரத்திற்கான மாற்று நடிகரை தயாரிப்புக் குழு விரைந்து தேடி வருகிறது.