வைரலாகும் நடிகர் சேரன் பதிவிட்டுள்ள ட்வீட்..! 

 
1

சினிமா நடிகைகள் தவறான தொழில் செய்பவர்கள் என முன்னணி நடிகையின் பெயரை குறிப்பிட்டு பேட்டி கொடுத்த சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு என்பவரது வீடியோ இணையத்தில் தற்போது பரவி சர்ச்சை ஆகி இருக்கிறது.

அரசியல் காரணத்திற்காக ஒரு முன்னணி நடிகையின் பெயரை இப்படி கூறி இருப்பது பற்றி கண்டனங்கள் எழுந்து வருகிறது.இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி இயக்குனர் சேரன் கொந்தளித்து டுவிட்டர் தளத்தில் ட்விட் செய்திருக்கிறார்.

"வன்மையாக கண்டிக்கிறேன் எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்" என சேரன் குறிப்பிட்டு இருக்கிறார்.

From Around the web