தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் டேனியல் பாலாஜி அனுமதி..!
 

 
தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் டேனியல் பாலாஜி அனுமதி..!

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த டேனியல் பாலாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான டேனியல் பாலாஜிக்கு காக்கா படம் நல்ல அறிமுகமாக அமைந்தது. அதை தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகராக உயர்ந்தார்.

அதை தொடர்ந்து வடசென்னை படத்தில் மாறுபட்ட நடிப்பை வழங்கிய டேனியல் பாலாஜி, பிகில் படத்தில் நடித்து மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தென்னிந்தியாவின் பல்வேறு மொழிப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

From Around the web