நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்..!

 
1

நடிகர் டேனியல் பாலாஜி, பெரும்பாலும் வில்லன் ரோல்களிலேயே நடித்துள்ளார். பாலாஜி என்ற சொந்த பெயர் கொண்ட இவர், முதல் முறையாக 2000 - 2001 ம் ஆண்டு ஒளிபரப்பான சித்தி டிவி சீரியலில் டேனியல் என்ற கேரக்டரில் நடிகராக அறிமுகமானார். அதில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

இதையடுத்து டேனியல் என்ற பெயரை தனது பெயருடன் அடைமொழியாக இணைத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து 2002 ம் ஆண்டு முதல் முறையாக ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவும், கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக தமிழில் 2019 ல் விஜய் நடித்த பிகில் படத்தில் டேனியல் பாலாஜி, டேனியல் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது கன்னட படங்களில் டேனியல் பாலாஜி நடித்து வருகிறார்.
 

இந்நிலையில் திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

From Around the web