"அந்த இண்டர்வெல் பிளாக்"மாமன்னன் ரகசியம் உடைத்த தனுஷ்..!!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள மாமன்னன் படத்தை பார்த்த தனுஷ், படம் தொடர்பான தனது கருத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் இன்று வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் சொந்தமாக தயாரித்துள்ளார். மேலும் இதுதான் அவர் நடிக்கும் கடைசி படம் என்பதால், தமிழக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
Maamannan by @mari_selvaraj is an emotion ♥️ A big hug to you Mari. Vadivelu sir and @Udhaystalin have delivered a very convincing performance. Great work from Fahadh and @KeerthyOfficial. Theatres are gonna erupt for the interval block. finally @arrahman sir 🙏🙏♥️ BEAUTIFUL
— Dhanush (@dhanushkraja) June 28, 2023
படம் ரிலீசாவதற்கு முன்னதாகவே குறிப்பிட்ட சில பிரபலங்களுக்கு படம் போட்டுக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறு படத்தை பார்த்த நடிகர் தனுஷ் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை சகட்டுமேனிக்கு பாராட்டியுள்ளார்.
மாமன்னன் ஒரு எமோஷ்னல், மாரி செல்வராஜை ஆரத்தழுவிக் கொள்கிறேன். படத்தின் இடைவெளிக் காட்சியில் திரையரங்கம் அதிரப்போகிறது என்று நடிகர் தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.