ரூ.1 கோடி நிதி வழங்கிய நடிகர் தனுஷ்..!!

 
1

கடந்த பல ஆண்டுகளாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என்பதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில், நடிகர் சங்க கட்டடப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வைப்பு நிதிக்காக, தனது சொந்த நிதியிலிருந்து, ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் இன்று நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் வழங்கியுள்ளார் .

தமிழ்நாட்டு திரைக் கலைஞர்களின் பல நாள் கனவாக இருந்து வந்த தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப்பணியை விரைந்து நிறைவு செய்ய திரை பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியினை தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் தற்போது நடிகர் சங்க கட்டடப் பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web