ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் ‘லியோ’ கேமியோ- யார் அவர்..?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் ஏகப்பட்ட சர்பரைஸ் விஷயங்கள் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக நடிகர் சூர்யா ஒரு அதிரடி வில்லனாக ரோலெக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் தோன்றியது, ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
விக்ரம் படத்தில் நடித்த கமல்ஹாசனுக்கு இணையாக சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் அமைந்தது. கடைசியாக படத்தில் வெறும் 8 நிமிடங்கள் தான் சூர்யா வருவார் என்றாலும், விக்ரம் படத்தின் அடுத்த பாகத்துக்கு அதுவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதேபோன்ற ஒரு சர்ப்பரைஸ் சிக்குவன்ஸை லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்திற்காக உருவாக்க இருக்கிறாராம். அது ரோலெக்ஸை விட பத்து மடங்கு மிரட்டலான கதாபாத்திரம் என்று படக்குழு வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.
அதன்படி இந்த கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷை நடிக்கவைக்க லோகேஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இது உறுதியானால், தனுஷ் விஜய்யின் தம்பியாக நடிப்பார் என்று தெரியவந்துள்ளது. கடைசியில் இந்த கேமியோ கதாபாத்திரம் விஜய் கையால் இறந்துபோவது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.