நாளை வெளியாகிறது இசைஞானி இளையராஜாவின் இசையில் நடிகர் தனுஷ் பாடியிருக்கும் பாடல்..!!  

 
1

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க தயாராகி இருக்கும் திரைப்படம் விடுதலை. மேலும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஆர்எஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவில், ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றி உள்ளனர். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்கும் இந்த விடுதலை திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இரண்டு பாகங்களாக வெளிவர தயாராகி வருகிறது. 

dhanush

தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக விடுதலை திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்து இருக்கிறார் வெற்றிமாறன். முன்னதாக பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றிமாறன் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த ஐந்து திரைப்படங்களில் 4 படங்களில் கைகோர்த்த தனுஷ் தற்போது விடுதலை படத்திலும் இணைந்துள்ளார். ஆனால் இந்த முறை நடிகராக அல்ல பாடகராக இணைந்துள்ளார்.

விடுதலை படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், விடுதலை படத்தின் முதல் பாடல் வருகிற பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த முதல் பாடலான ‘ஒன்னோட நடந்தா...’ எனும் பாடலை இசைஞானி இளையராஜாவின் இசையில் நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார்.


 


இந்தப் பாடல் பதிவின்போது இயக்குநர் வெற்றிமாறன் முன்னிலையில், இசைஞானி இளையராஜாவிடம் தனுஷ் பாடலை கற்றுக் கொள்ளும் ப்ரோமோ வீடியோ சர்ப்ரைஸாக வெளியாகி தற்போது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

From Around the web