இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் நடிகர் தனுஷ் திடீர் கோரிக்கை..!

 
நடிகர் தனுஷ்

ஜகமே தந்திரம் பட ஷூட்டிங்க் சமயத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைந்து உருவாக்கும்படி கேட்டுக்கொண்டே இருப்பேன் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளது ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் வரும் 18-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் ஊடகங்களில் வேகம் எடுத்துள்ளன.

இந்நிலையில் ஜகமே தந்திரம் படக்குழுவினர்  ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அப்போது பேசிய தனுஷ், படத்தின் கதாநாயகன் சுருளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. படப்பிடிப்பின் போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கொண்டுவர வேண்டும் என கார்த்திக் சுப்புராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

நான் நடிக்கும் படங்கள் மீது நம்பிக்கை இருந்தாலும், அதுகுறித்து நான் வெளியில் பேசமாட்டேன். ஆனால் ஜகமே தந்திரம் படம் அப்படி கிடையாது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அதை நான் தைரியமாக வெளியே சொல்கிறேன் என்று தனுஷ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மேலும் பேசிய அவர், ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும், அது திரையரங்குகளில் வெளியாகாமல் போய்விட்டதே என்கிற வருத்தம் எனுக்குள் உண்டு. எனினும் ஊரடங்கு காலத்தில் மனசோர்வுற்றுள்ள மக்களுக்கு இந்த படம் மகிழ்ச்சியை தரப்போகிறது என்று நினைக்கும் போது நிறைவை தருகிறது என்று தனுஷ் தெரிவித்தார்.

From Around the web