இல்லற வாழ்வில் இணைந்த தீனா- குவியும் வாழ்த்துகள்..!!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவரான தீனாவுக்கு அவருடைய சொந்த ஊரில் திருமணம் நடந்துள்ளது. வரும் ஜூன் 10-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
 
dheena

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் ’ரசிகர் போனோ’ செக்மெண்ட் என்கிற பகுதி இருந்தது. நிகழ்ச்சியில் விறுவிறுப்பு குறையும் போது, கைப்பேசி அழைப்பு வழியாக ஒரு குரல் தோன்றி, நிகழ்ச்சியில் இருக்கும் அனைவரையும் கலாய்க்கும்.

விஜய் டிவி பிரபலங்கள் மட்டுமில்லாமல்; சினிமா பிரபலங்களை கூட சகட்டுமேனிக்கு அந்த ரசிகர் கலாய்ப்பார். இப்படி ரசிகர் போனோ செக்மெண்ட்டில் அனைவரையும் கலாய்த்து பிரபலமானவர் தான். அதை தொடர்ந்து மெல்ல மெல்ல பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சிகளில் வந்து போனார்.

இதன்மூலம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய‘கைதி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், எமோஷ்னல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதனால் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார் தீனா.

dheena

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனக்கு ஜூன் 1-ம் தேதி (இன்று) திருமணம் நடக்கவுள்ளதாக கூறினார். சொந்த ஊர் திருவாரூரில் நடக்கும் திருமணம் என்பதால், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்வார்கள். சென்னையில் வரும் 10-ம் தேதி திருமண வரவேற்பு நடக்கிறது. அந்நிகழ்வில் அனைவரும் பங்கேற்கலாம் என்று தீனா தெரிவித்தார்.

அப்போது அவரிடம் மணப்பெண் குறித்து கேள்வி எழுப்பப்பட்டத். அதற்கு பதிலளித்த தீனா, இது பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம், மணப்பெண் கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வருகிறார். இனிமேல் தான் நாங்கள் காதலிக்க வேண்டும் என்று சிரிப்புடன் தெரிவித்தார்..

இதையடுத்து அவருக்கு இன்று காலை திருவாரூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் தனது சொந்த ஊரில் தீனா வீடு கட்டினார். அதே கையோடு திருமணத்தையும் முடித்துக்கொண்டார். இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் புதுமனத் தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

From Around the web