வாடகைக்கு வீட்டை கொடுத்தால் வீட்டை லாட்ஜாக மாற்றிய நடிகர் கஞ்சா கருப்பு..!

 
1

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான கஞ்சா கருப்பு சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வசித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் சூட்டிங் நடக்கும் போது நடிகர் கஞ்சா கறுப்பு இந்த வீட்டில் வந்து தங்குவதாக தெரிகிறது. இந்நிலையில் கஞ்சா கருப்பு 3 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும், வீட்டை வேறு ஒரு நபருக்கு உள்வாடகைக்கு விட்டு, மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் நடப்பதாகவும் வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கஞ்சா கருப்பு, வீட்டில் வைத்திருந்த கலைமாமணி விருதை காணவில்லை என்று மதுரவாயல் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். நான் இந்த வீட்டில் 4 வருடமாக இருந்து வருகிறேன். வழக்கமாக அவர் வாடகையை கேட்பதற்கு முன்பே நான் தந்துவிடுவேன்.சில நாட்களுக்கு முன், அவர் போன் செய்து தனக்கு வீடு வேண்டும் என்று வீட்டை காலி செய்ய சொன்னார். நான் ஒருவாரம் டைம் கேட்டிருந்தேன். நான், மதுரை சென்றுவிட்டு இன்று வந்து பார்க்கிறேன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வீட்டுக்குள் நான் வைத்திருந்த கலைமாமணி விருதை காணவில்லை என்று கூறியுள்ளார். வீட்டின் உரிமையாளர் மூன்று லட்சம் வாடகை பாக்கி என புகார் அளித்திருக்கும் நிலையில், கஞ்சா கருப்பு விருதை காணவில்லை என கூறியிருப்பதால், உண்மையில் விருது காணாமல் போனதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

From Around the web