பைக், கார்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட கவுதம் கார்த்திக்..!!

கொரோனா காலத்தில் தனக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி தொடர்பாக நடிகர் கவுதம் கார்த்திக் மிகவும் உருக்கமாக பேசியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
gautam karthik

தமிழில் 2013-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக் மகனான கவுதமுக்கு சினிமா அறிமுகம் எளிதாக இருந்தாலும், நடிகராக நிலைபெறுவதற்கு கடுமையாக போராட வேண்டி இருந்தது.

கடல் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதையடுத்து அவருடைய நடிப்பில் வெளியான ‘என்னமோ ஏதோ’, ’வை ராஜா வை’, ’முத்துராமலிங்கம்’, ’ரங்கூன்’, ’இவன் தந்திரன்’ என தொடர்ந்து 16 படங்களில் நடித்துள்ளார். இதில் ரங்கூன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடைசியாக கவுதம் கார்த்தி நடித்த ஆகஸ்ட் 16 1947, பத்து தல போன்ற படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பதிவு செய்தது. குறிப்பாக ஆகஸ்ட் 16 1947 படம் விமர்சகர்கள் வட்டத்தில் நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ளது. தற்போது கவுதம் கிரிமினல் பட வேலைகளில் பிஸியாக உள்ளார். 

முத்துராமலிங்கம் படத்தில் கவுதம் நடித்தபோது, உடன் நடித்த மஞ்சிமா மோகன் நட்பு கிடைத்தது. இது சில மாதங்களில் காதலாக மாறியது. கடந்தாண்டு நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து ஒரு நேர்காணலில் பங்கேற்ற கவுதம் கார்த்திக், தனது மனைவியை குறித்து மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

எனக்கு கடன் வாங்குவது பிடிக்காது. அதனால் எனது திருமணச் செலவுகளை நானே செய்துகொண்டேன். கொரோனா காலத்தில் எனக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் எனது பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை விற்றுவிட்டேன். அந்நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர் மஞ்சிமா தான். எந்தவொரு முடிவாக இருந்தாலும் அவரிடம் கலந்தாலோசித்துவிட்டு தான் எடுப்பேன் என கவுதம் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
 

From Around the web