குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்..! 

 
1

மலையாள திரையுலகில் முக்கிய நடிகராக உள்ளவர் தான் சுதேவ் நாயர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். மேலம் மலையாளத்தில் பிரபல நடிகராகவும் உள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவர் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார். இவர் எளிமையான முறையில் தனது திருமணத்தினை நடத்தியுள்ளார்.சமீபகாலமாக தெலுங்கிலும் வில்லனாக நடித்து வருகிறார் சுதேவ் நாயர்.

இவர் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான லைஃப் பார்ட்னர் என்னும் திரைப்படம் வெளியானது. இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இவருக்கு இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. மேலும் இவர் ஆங்கிலம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் தனது நீண்ட நாள் தோழியும் மாடலுமான அமர்தீப் கவுரை நேற்று திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரில் நடைபெற்றுள்ளது. மேலும் இவர்களுக்கு திரையுலகினர் மற்றும் நண்பர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

From Around the web