தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி பேனர் ஒட்டி போஸ் கொடுத்த பிரபல நடிகர்.!!
இயக்குநராக இருந்த ஜி.எம். குமார் 2002-ம் ஆண்டு வெளியான ‘காதல் வைரஸ்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், 2006-ம் ஆண்டு வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் பிரபலமானார்.
மேலும் குருவி, மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரை தப்பட்டை, மாயா போன்ற படங்களில் நடித்து முதன்மையான குணச்சித்திர நடிகராக உயர்ந்தார். நடப்பாண்டில் வெளியான பொம்மை நாயகி மற்றும் பல்லு படாம பார்த்துக்க போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றினார்.
ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை🤣 pic.twitter.com/w3EFA8JNTV
— G.M. Kumar (@gmkhighness) March 21, 2023
இந்நிலையில் ஜி.எம். குமார் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் சடலமாகவே அவர் தோன்றுகிறார். அப்படத்துக்காக அவருடைய புகைப்படத்தை போட்டு ஒரு கண்ணீர் அஞ்சலி பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு நின்று ஒரு புகைப்படத்தை அவர் எடுத்துள்ளார்.
அதை ட்விட்டரில் ”ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை” என்கிற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் காட்சியில் அவர் சடலமாக படுத்துக் கிடக்கும் புகைப்படத்தை அந்த ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். இது நெட்டிசன்களிடையே கவனமீர்த்து வருகிறது.
 - cini express.jpg)