நடிகர் ஹுசைனியின் திடீர் முடிவு..! என் இதயத்தை கராத்தை மாணவர்களிடம் ஒப்படைக்கவும்...!

மதுரையைச் சேர்ந்த ஹுசைனி, திரையுலகில் 1986ம் ஆண்டு 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். குறிப்பாக, விஜய் நடித்த 'பத்ரி' படத்தில், கராத்தை மாஸ்டர் வேடத்தில் விஜய்க்கு பயிற்சி அளிக்கும் காட்சிகள் இன்னும் ரசிகர்களின் நினைவில் இருக்கின்றன.
ஷிகான் ஹுசைனி சினிமாவில் மட்டுமல்ல வில்வித்தை மற்றும் உடற்பயிற்சி என்பவற்றிலும் தனது திறமையைக் காட்டியுள்ளார்.பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு கராத்தே மற்றும் நெஞ்சார்ந்த சுய பாதுகாப்பு பயிற்சி அளித்து வரும் ஷிகான் இன்று நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் குருவாக இருக்கின்றார்.
இந்தக் காலகட்டத்தில், அவர் எடுத்துள்ள ஒரு மனிதநேயம் மிக்க முடிவு அனைவரையும் பெருமையடைய வைத்துள்ளது. சமீபத்தில் நடிகர் ஹுசைனி தனது மரணத்திற்குப் பின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார்.
எனினும் “என் இதயத்தை மட்டும் என் கராத்தை மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!” எனக் கூறியுள்ளார் ஹுசைனி. இந்த வார்த்தைகள் பாசம் மற்றும் மரியாதை ஆகியவற்றை எடுத்துக் காட்டும் வலிமை கொண்டதாகக் காணப்படுகிறது.
ஷிகான் ஹுசைனியின் மாணவர்கள், சமூக வலைத்தளங்களில் அவரை பாராட்டும் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, "இவ்வளவு நாளாக அவர் இதயத்திலேயே நாங்க இருந்தோம்னு நம்பிகை வந்துடுச்சு!” என மாணவர்கள் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர்.