இந்த படத்தை நடிகர் ஜெய் நடிக்க மிஸ் பண்ணாராம்..! சூப்பர் படம் ஆச்சே..! 

 
1
தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் ஜெய் ஆகிய இருவரும் பல சூப்பர் ஹிட் படங்களை மிஸ் செய்துள்ளனர் என்று  அவர்கள் அளித்த பேட்டியில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறிப்பாக நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில் மாதவன் நடித்த ‘ரன்’, ஜீவா நடித்த ‘டிஷ்யூம்’ விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன்’ ஆகிய படங்களின்  வாய்ப்புகள் முதலில் எனக்கு தான் வந்தது என்றும் ஆனால் அந்த நேரத்தில் சில கமிட்மெண்ட் மற்றும் ஒரு சில காரணங்களால் இந்த படங்களில் நடிக்க  முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த படங்களில் மட்டும் நான் நடித்திருந்தால் இந்நேரம் பெரிய ஹீரோவாக இருப்பேன் என்றும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். அதேபோல் ஜெயம் ரவி  நடித்த ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்திற்கு என்னைத்தான் முதலில் ஒப்பந்தம் செய்தார்கள் என்றும் ஆனால் ஒரு சில காரணங்களால்  திடீரென  ஜெயம் ரவிக்கு அந்த படம் சென்றுவிட்டது என்றும் நடிகர் ஸ்ரீகாந்த் கூறினார்

இதேபோல் நடிகர் ஜெய் அளித்த பேட்டியில் ’சுப்பிரமணியபுரம்’ படத்திற்கு பின்னர் ’நாடோடிகள்’ நான் செய்ய வேண்டிய படம் தான். மேலும் ’சுப்ரமணியபுரம்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ’சிவா மனசுல சக்தி’ படத்தில் என்னை நடிக்க வைக்க தான் மிகவும் முயற்சி செய்தார்கள், ஆனால் ’சுப்பிரமணியபுரம்’ படத்திற்காக நான் தாடி வைத்திருந்ததால் நான் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை

அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் நான் நடிக்க வேண்டிய படம் தான். அந்த படத்தில் நான் ஒப்பந்தமாகி படப்பிடிப்பு வரை சென்றது. ஆனால் திடீரென ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை

அதேபோல் விஷ்ணு விஷால் நடித்த ‘ராட்சசன்’ திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் எனது மிக நெருங்கிய நண்பர். அவர் நான் படப்பிடிப்பில் இருக்கும்  போதெல்லாம் என்னை வந்து பார்ப்பார், ’ராட்சசன்’ படத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என்று அவர் உறுதி செய்திருந்தார். ஆனால் திடீரென அந்த படத்தின் தயாரிப்பாளர் மாறியதால் அந்த  படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனது’ என்று கூறினார்.

மேற்கண்ட மிஸ் ஆன  படங்களில் ஸ்ரீகாந்த் மற்றும் ஜெய்  நடித்திருந்தால் இருவருமே இந்நேரம் சூப்பர் நடிகர் ஆகியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From Around the web