சிம்பு திருமணம் குறித்து மனம் திறந்த நடிகர் ஜெய்..!

 
சிம்பு மற்றும் ஜெய்
பல்வேறு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள நடிகர் ஜெய், சிம்பு நடித்து வரும் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சென்னையில் தமிழ் திரைப்பட செய்தியாளர்கள் சங்கத்தின் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜெய் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜெய், மீண்டும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. அதுகுறித்து அவரிடமே பலமுறை கேட்டுவிட்டேன். ஆனால் நான் ஹீரோவாக நடிப்பதால் முடியாது என்று சொல்லிவிட்டார்.

மேலும் திருமணம் குறித்த கேள்வியை அவர்கள் ஜெய்யிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஜெய், சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன். அனேகமாக சிம்புக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

நடிகர் ஜெய் பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவ சிவா, குற்றமே குற்றம் என பல்வேறு படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் சுந்தர். சி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாகவும் ஜெய் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From Around the web