மரணம் அடைந்த ரசிகர் இல்லத்துக்கு நேரில் சென்ற நடிகர் ஜெயம் ரவி!

 
1

ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை k.k.நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (33) சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். இவர், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார்.

இந்நிலையில், தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.

From Around the web