பிரபல நடிகர் ஜெயராம் வீட்டில் கல்யாணம்... முதல் அழைப்பிதழ் யாருக்கு தெரியுமா?
Oct 10, 2024, 06:05 IST
நடிகர் ஜெயராம் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தற்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அவர் தனுஷின் ராயன் படத்தில் தம்பி ரோலில் நடித்து இருந்தார்.
அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. காளிதாஸ் ஜெயராம் பிரபல மாடல் தாரிணி காலிங்கராயர் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்.இவர்களுக்கு சமீபத்தில் திருமண நிச்சியதார்த்தம் நடைபெற்றது.
தற்போது அவர்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.திருமண அழைப்பிதழை முதலில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தான் ஜெயராம் குடும்பம் கொடுத்து இருக்கிறார்கள். இதோ அந்த புகைப்படம்...