பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகள் மாளவிகாவின் நிச்சயதார்த்தம்..!

 
1

தமிழில் கோகுலம் படத்தில் அறிமுகமான ஜெயராம் புருஷ லட்சணம், கோலங்கள், முறை மாமன், பெரிய இடத்து மாப்பிள்ளை, நைனா, பஞ்ச தந்திரம், கடைசியாக பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 வரை நடித்துள்ளார்.

அடுத்து தளபதி 68 படத்திலும் நடித்து வருகிறார். கடந்த மாதம் விக்ரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வரும் காளிதாஸ் ஜெயராமுக்கு அவரது காதலி தாரனியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று ஒருமாதம் கூட முடிவடையாத நிலையில், தற்போது அவரது தங்கை மாளவிகாவின் திருமண நிச்சயதார்த்தம் இப்போது நடந்து முடிந்துள்ளது.

மாளவிகாவும், நவ்னீத் கிரீஷ் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கூர்க்கில் (Coorg) முடிந்துள்ளது. இதில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். ‘ப்ரோ, உனக்கு நிச்சயம் ஆகிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை. நவ்னீத்தை இனி கண் கலங்காமல் பார்த்துக் கொள்’ எனக் குறும்பாகத் தனது தங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் காளிதாஸ்.

 கூடிய சீக்கிரமே காளிதாஸ் ஜெயராம் மற்றும் அவரது தங்கை மாளவிகா திருமணமும் நடைபெற உள்ள நிலையில், ஜெயராம் வீடே கல்யாண வீடாக மாறியுள்ளது.

From Around the web