தளபதி 68 அப்டேட் எப்போ..? ஒத்த வார்த்தையில் பதில் கூறிய ஜீவா..!!
 

விஜய் நடிப்பில் அடுத்து உருவாகும் தளபதி 68 பட அப்டேட் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ஜீவா ஒரு வார்த்தையில் கூறிய பதில் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
 
jiva

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகின்றன. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளிவருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சூப்பர் குட் ஃப்லிம்ப்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘பூவே உனக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ’ஷாஜகான்’, ’திருப்பாச்சி’, ’ஜில்லா’ போன்ற படங்களில் விஜய் நடித்துள்ளார்.

தற்போது மீண்டும் அந்நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்தை சூப்பர் குட் ஃப்லிம்ப்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி. சவுத்ரியும் அவருடைய மகன்களும் நடிகர்களுமான ரமேஷ் மற்றும் ஜீவா தயாரிக்கின்றனர். தற்போது படத்துக்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.

இதுகுறித்து சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர் நடிகர் ஜீவாவை டேக் செய்து “தளபதி 68 அப்டேட் கொடுங்கள்” என்று வினவியுள்ளார். அதற்கு ஜீவா “விரைவில்” என்று பதிலளித்துள்ளார். இதன்மூலம் சூப்பர் குட் ஃபிலிம்ப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது.

From Around the web