நடிகர் ஜே.கே. ரித்தீஷின் மனைவி திடீர் கைது..!!

நகைப் பட்டறை தொழிலாளிக்கு பணம் தராமல் ஏமாற்றிய ஜே.கே. ரித்தீஷின் மனைவிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
ritheesh

சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநராக இருந்த ஜே.கே. ரித்தீஷ் கடந்த 2019-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 46 மட்டுமே. நடிகராக மட்டுமில்லாமல் தி.மு.க கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு ராமநாதபுரம் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். பிறகு அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் அதிமுக-வில் இணைந்தார். 

எதிர்பாராதவிதமாக ஜே.கே. ரித்தீஷ் உயிரிழந்த சம்பவம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவர் இறந்த பிற்பாடு ஜே.கே. ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி நகைக் கடையை சொந்தமாக வைத்துள்ளார். நகைப் பட்டறை வைத்திருக்கும் திருச்செல்வம் என்பவர் அவருக்கு நகைகளை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் அண்மையில் திருச்செல்வம் செய்துகொடுத்த நகைக்கு கட்டணமாக ரூ. 60 லட்சம் காசோலையை கொடுத்துள்ளார் ஜோதீஸ்வரி. ஆனால் அதை வங்கியில் சென்று கொடுத்தபோது, ஜோதீஸ்வரி கணக்கில் போதிய பணமில்லை என்று கூறி காசோலை நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து திருச்செல்வம் நேரடியாக சென்று ஜோதீஸ்வரிடயிடம் பணம் கேட்டுள்ளார்.

அதற்கு ஜோதீஸ்வரி உறுதியான விளக்கம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருச்செல்வம் செக் மோசடி செய்த வழக்கில் ஜோதீஸ்வரி மீது புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விசாரணை காரைக்குடி நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது. அதன்படி ஜோதீஸ்வரி பணம் தராமல் ஏமாற்றியதை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 6 மாதம் சிறை மற்றும் ரூ. 60 லட்சம் அபராதம் வழங்கி தீர்ப்பு கூறியுள்ளது.
 

From Around the web