பிரபல நடிகர் கலாபவன் மணி உயிரிழந்தது இதனால் தான்..!

 
1

கடந்த 21016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி, பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி கிடந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அன்றே காலமானார். கலாபவன் மணி இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், பிரேத பரிசோதனையில் மணியின் உடலில் மெத்தில் மற்றும் மெத்தில் ஆல்கஹால் இருந்ததும், க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருந்ததாகவும் கூறப்பட்டது.

மது

இதைத் தொடர்ந்து ஹைதாராபாத்தில் உள்ள மத்திய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்ததால் குழப்பம் நீடித்து வந்த நிலையில், இதுதொடர்பாக சிபிஐ விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மணி கடுமையான கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி இருந்ததால் மரணமடைந்ததாக மருத்துவ அறிக்கை அளித்ததை தொடர்ந்து, அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், கலாபவன் மணியின் வழக்கை விசாரித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன், மணியின் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். அதில் கலாபவன் மணிக்கு நீரிழிவு நோய் இருந்தது. அதற்கு அவர் மருந்தும் உட்கொண்டு வந்தார். ஆனால், அவர் மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்காமல் தினமும், பீர் குடித்து வந்துள்ளார். அதிலும், தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்துள்ளார். இதன் காரணமாக அவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதோடு பீரில் சிறிய அளவு மெத்தனால் ஆல்கஹாலும் இருக்கும்.

அதிக அளவு பீர் உட்கொண்டதாலேயே அவரது ரத்தத்தில் மெத்தனால் இருந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளதாகவும் உன்னிமுகுந்தன் தெரிவித்துள்ளார். கலாபவன் மணி இறப்பதற்கு முந்தைய நாளும் கூட 14 பீர் குடித்ததாக தெரிகிறது. இந்த அளவுக்கு மது அருந்தியதாலேயே அவரது கல்லீரல் பாதிப்படைந்து இறந்து போனார் என உன்னிமுகுந்தன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

From Around the web