கமல்ஹாசன் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்..! யாருக்கு என்ன நடந்தது ?
Jun 14, 2024, 05:35 IST

தக் லைஃப் என்பது கமல்ஹாசனுடன் இணைந்து திரைக்கதையை எழுதிய மணிரத்னம் இயக்கியவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி கேங்ஸ்டர் அதிரடி நாடகத் திரைப்படமாகும் . இதனை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் , மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் இப்படத்தில் கமலுடன் த்ரிஷா, சிம்பு , நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே "Thug Life ஷூட்டிங்கில் ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் போது நிகழ்ந்த விபத்தில், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.