நடிகர் கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!!

 
1

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில்  தனிமைப்படுத்திகொண்டார்.

நடிகர் கமல்ஹாசன், ‘ஹவுஸ் ஆப் கதர்’ என்ற பெயரில் பிரத்யேக ஆடை  பிராண்டை உருவாக்கியுள்ளார்.  காதி ஆடைகளை  மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமடைய செய்வற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்மையில் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார்.  சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய கமலுக்கு இருமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் அமெரிக்கா சென்று திரும்பிய பின் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web