விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி..!

 
விஜய் மற்றும் கார்த்தி

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை சந்தித்த நடிகர் கார்த்தி, இருவரும் பரஸ்பரமாக நலம் விசாரித்துக் கொண்டதாக தெரிகிறது.

சென்னை பூந்தமல்லி அருகேவுள்ள தனியார் ஸ்டூடியோவில் விஜய்யின் பீஸ்ட், கார்த்தியின் சர்தார் படங்களுக்கான படப்பிடிப்பு நடந்து வருகின்றன. இந்நிலையில் இரண்டு நடிகர்களும் பரஸ்பரமாக சந்தித்து கொண்டுள்ளனர்.

பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார் கார்த்தி. சில நிமிடங்கள் ஓரமாக நின்று இருவரும் பேசி கொண்டுள்ளனர். சர்தார் படத்துக்காக கார்த்தி இரண்டு வேறு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அதில் வயதான கதாபாத்திரத்தில் இருந்த கார்த்தியை பார்த்து வியந்து விஜய் பாராட்டியுள்ளார்.

தொடர்ந்து விஜய்யின் படங்களை பார்த்து வருவதாகவும், அவருடைய படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என விஜய்யிடம் கார்த்தி பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web