இனி கவினை கையிலே பிடிக்க முடியாது..!!
 

டாடா படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து நடிகர் கவினுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால் தனது சம்பளத்தையும் அவர் கணிசமாக உயரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
satish

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். அவர் நடிக்கும் மற்றொரு படத்தின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சரவணன் மீனாட்சி சீரியலில் அறிமுகமான கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்து மிகப்பெரியளவில் பிரபலமானார். அதை தொடர்ந்து ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ படங்களில் துணை இயக்குநராக பணியாற்றிய அவர், மீண்டும் நடிகராக அரிதாரம் பூசினார்.

kavin

ஒலம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில், கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் தயாரான படம் ‘டாடா’. இந்த படம் கடந்த மாதம் வெளியாகி  ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக கவினின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது.

படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன், கவினை நேரில் அழைத்துப் பாராட்டினார். மேலும் தனது ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் ஃப்லிம்ப்ஸ் நிறுவனம் சார்பில் கவினின் அடுத்த படத்தை அவர் தயாரிக்கவுள்ளார். ஆனால் படக்குழு தொடர்பான முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

satish

இந்நிலையில் கவின் நடிக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இப்புதிய படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் நடன இயக்குநர் சதிஷ் கிருஷ்ணன்  இயக்குகிறார்.   இவர் ஏற்கனவே ‘உன்னாலே உன்னாலே’, ‘பீஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்துக்காக நடிகர் கவினுக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் படத்துக்கு அனிரூத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web