நடிகர் கிஷோரின் கேரக்டர் வீடியோ வெளியீடு..!
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படம் ரிலீசாக இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த ப்ரொமோஷன்களால் லைகா நிறுவனம் ரசிகர்களை திண்டாட செய்து வருகிறது. படத்தை இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கியுள்ள நிலையில், படத்தில் ரஜினிகாந்துடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தின் கேரக்டர் வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு வரும் லைகாவிற்கு படம் ரிலீசாகும் வரையில் அது தொடரும் என்று தோன்றுகிறது.
அடுத்தடுத்து துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ரித்திகா சிங், பகத் ஃபாசி, ராணா உள்ளிட்டவர்களின் கேரக்டர் வீடியோக்கள் வெளியான நிலையில், இன்றைய தினம் வேட்டையன் படத்தில் நடிகர் கிஷோரின் கேரக்டர் வீடியோ வெளியாகி உள்ளது. படத்தில் எஸ்பியாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ளார் ரஜினிகாந்த். அவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக மாறுவதற்கான பிளாஷ் பேக் மிகவும் அழுத்தமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் நடிகர் கிஷோரும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தில் அவரது கேரக்டர் பெயர் ஹரீஷ். அதிரடி சரவெடியாக நடிகர் கிஷோரின் கேரக்டர் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.