நள்ளிரவில் ஐஸ்வர்யா ராய் வீட்டு கதவை தட்டிய நடிகர்..!

 
1

சல்மான் கானின் தம்பிகள், தங்கைகளுக்கு எல்லாம் திருமணமாகி வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் சல்மான் கானுக்கு இதுவரை திருமணமாகவில்லை. அவர் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக இருக்கிறதே தவிர எந்த காதலும் திருமணத்தில் முடியவில்லை.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ஹம் தில் தே சுகே சனம் படத்தில் சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் இடையேயான கெமிஸ்ட்ரி பற்றி அதிகமாக பேசப்பட்டது. அந்த படத்தில் நடித்தபோது சல்மான் கானுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே காதல் ஏற்பட்டது.

அந்த காதல் நிலைக்கவில்லை. சல்மான் கான் தன்னை வார்த்தைகளால் காயப்படுத்தியதுடன், தாக்கவும் செய்ததாக தெரிவித்தார் ஐஸ்வர்யா ராய். திருமண அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். காதலித்தபோது ஒரு நாள் இரவு ஐஸ்வர்யா ராய் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார் சல்மான் கான்.

17வது மாடியில் இருந்த ஐஸ்வர்யா ராயின் வீட்டுக் கதவை போட்டு தட்டு தட்டுனு தட்டி கத்தியிருக்கிறார் சல்மான் கான். அதில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லாம் விழித்துவிட்டார்கள். நீ கதவை திறக்காவிட்டால் 17வது மாடியில் இருந்து குதித்துவிடுவேன் என மிரட்டியிருக்கிறார். இதையடுத்து கதவை திறந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அவர் கதவை திறந்தபோது இரவு 3 மணி.

இது குறித்து பேட்டி ஒன்றில் அப்பொழுது சல்மான் கான் கூறியதாவது,

ஆமாம், நான் ஐஸ்வர்யா ராய் வீட்டுக் கதவை தட்டியது உண்மை தான். நான் அவரை காதலிக்கிறேன். சண்டை இல்லை என்றால் காதல் இல்லை. காதலால் தான் சண்டை போடுகிறேன், பொசசிவாக இருக்கிறேன். ஐஸ்வர்யா வீட்டுக்கு இனி போகக் கூடாது என போலீசார் என்னிடம் தெரிவித்துள்ளனர் என்றார்.ஐஸ்வர்யா ராயை பிரிந்த பிறகு சல்மான் கான் வாழ்வில் சில முறை காதல் வந்துவிட்டு போய்விட்டது. அவர் தற்போது லூலியா வந்தூரை காதலிப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web