நாட்டின் மிகப்பெரிய ராகவேந்திரர் சிலையை நிறுவினார் நடிகர் லாரன்ஸ்..!

 
ராகவா லாரன்ஸ்

இந்தியாவிலேயே மிகவும் உயரமான ராகவேந்தர் சிலையை நடிகர் ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள கோயிலில் நிறுவப்பட்டுள்ளது.

நடன இயக்குநராக சினிமாவுக்குள் வந்தவர் ராகவா லாரன்ஸ். தற்போது நடிகர் மற்றும் இயக்குநர் என்று பன்முகத்தன்மையோடு கோலிவுட் சினிமாவில் வலம் வருகிறார். தமிழில் இவர் இயக்கிய காஞ்சனா சிரீஸ் படங்கள் மிகப்பெரியளவில் வெற்றி பெற்றன.

இத்தனையும் தான் வணங்கும் ராகவேந்திரர் சுவாமி அருள் தான் காரணம் என்று லாரன்ஸ் நம்புகிறார். இதற்காக ஏற்கனவே சென்னையில் ஒரு ராகவேந்திரர் சுவாமி கோயிலை அவர் கட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரர் சிலையை அவர் நிலவியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், தனது மிகப்பெரிய கனவு நனவாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் இப்போது இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் அதிகாரம், ருத்ரன் மற்றும் பி. வாசு இயக்கும் சந்திரமுகி- 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

From Around the web