புதிய ஐபோனை வாங்கியதை பெருமிதமாக அறிவித்த நடிகர் மாதவன்..!

 
1

நேற்று முதல் ஐபோன் 15 சீரிஸ் விற்பனைக்கு வந்து இருக்கிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஐபோன் 15 சீரிஸை வாங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் மாதவன் தற்போது ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வாங்கி பெருமைப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிடைத்தது. மேட் இன் இந்தியா ஐபோன் 15 ஐ சொந்தமாக்குவதில் பெருமிதமும் மகிழ்ச்சியும்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

சமீபத்தில் வெளியான ஐபோன் 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட போன் என்பது குறிப்பிடத்தக்கது. பல சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் ஐபோன் 15 போனை வாங்கி வருகின்றனர். வெளிநாடுகளை விட ஐபோன் 15 இந்தியாவில் அதிக விலையில் இருப்பதாக ட்ரோல்களும் மீம்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஐபோன் 15 தொடக்க நிலை 128GB பதிப்பின் விலை ரூ. 79,900, 256GB சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ. 89,900 மற்றும் 512 GB சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ. 1,09,900 ஆகும்


 

From Around the web