திருப்பதி கோவிலுக்கு நம்பி நாராயணனுடன் சென்ற நடிகர் மாதவன்..! 

 
1

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் நடிகர் மாதவன் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார்…

அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த மாதவனுடன் புகைப்படம் எடுப்பதற்காக ரசிகர்கள் திரண்டனர் அவர்களுடன் மாதவன் புகைப்படம் எடுத்து கொண்டார் பலரும் காத்திருந்து அவருடன் எடுத்தனர்.

நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் ராக்கெட்ரி என்கிற திரைப்படத்தை எடுத்தார்…இப்படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குனராக அவர் களமிறங்கினார்…அதுமட்டுமின்றி இதில் நம்பி நாராயணனாக நடித்தும் அசத்தி இருந்தார் ராக்கெட்ரி திரைப்படம் கடந்தாண்டு திரைக்கு வந்து அமோக வரவேற்பை பெற்றது.

ராக்கெட்ரி திரைப்படத்திற்கு மேலும் ஒரு மகுடம் சூட்டும் விதமாக அப்படத்திற்காக நடிகர் மாதவனுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது இது பெரும் பெருமிதமாக பார்க்கவும் படுகிறது….நடிகராக திரைத்துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் நடித்தாலும் இதுவரை ஒருமுறை கூட தேசிய விருது பெறாமல் இருந்த மாதவன் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கி சாதித்துள்ளார்.

ராக்கெட்ரி படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்துள்ளதை அடுத்து அவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் வந்து நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்…அங்கு எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.


 

From Around the web