லவ்வரை அறிமுகப்படுத்திய நடிகர் மணிகண்டன்..! ஆனால் அது ரியல் லவ்வர் இல்லையாம்..!
தமிழ் சினிமாவில் ஹீரோ என்றாலே மாசாக காட்டி வரும் நிலையில், குறட்டை விடும் ஒரு நபரை நாயகனாக இந்த ஆண்டு குட்நைட் படத்தின் மூலம் இயக்குநர் விநாயகர் சந்திரசேகரன் அழகாக காட்டியிருந்தார். பெரிய அலப்பறை, அடிதடி, ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகள், விவாகரத்து, காதல் தோல்வி என எமோஷன்களை பிழிவது என இல்லாமல் மென்மையான ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதில், மணிகண்டன் தன்னை அழகாக பொருத்தி நடித்த விதம் அனைவரையும் இந்த ஆண்டு அதிக அளவில் கவர்ந்தது.
மேலும், மத்தகம் என்னும் வெப்சீரிஸில் மிரட்டல் ஆகவும் நடித்திருந்தார். சமீபத்தில், குட்நைட் படத்தின் நாயகி மீதா ரகுநாத் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில், மணிகண்டன் தற்போது தனது லவ்வரை அறிமுகம் செய்து வைத்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், ட்விஸ்ட் என்னவென்றால் இது ரியல் லவ்வர் கிடையாது. மணிகண்டன் அடுத்து நடிக்கும் படத்தின் டைட்டில் தான் ‘லவ்வர்’.
மாடன் லவ் சென்னை எனும் ஓடிடி படைப்பில் இடம்பெற்ற லாலாகுண்டா பொம்மைகல் கதையில் நாயகியாக நடித்த ஸ்ரீ கௌரி பிரியாவை திவ்யா என்றும் அவர் தான் தனது லவ்வர் என்றும் தற்போது வீடியோ வெளியிட்டு புதிய புரமோஷனை செய்துள்ளார் மணிகண்டன்.
என் உயிரை கொல்லும் தேன்சுடரே @gouripriyareddy ❤️💙
— Manikandan Kabali (@Manikabali87) December 23, 2023
Meet My #Lover Dhivya 🥰 pic.twitter.com/8GCTltvfHO