முதல்வர் காலில் ரஜினிகாந்த் விழுந்ததால் தமிழ்நாட்டின் மானமே போய்விட்டது - நடிகர் மன்சூர் அலிகான்..! 

 
1

மன்சூர் அலிகான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ’லியோ’ படத்தின் ஆடியோ லான்ச் மதுரையிலா? அல்லது சென்னையிலா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது ’நிலாவில் நடக்கும், சந்திராயன் அருகில் நடக்கும்’ என்று காமெடியாக கூறினார்.

1

ரஜினிகாந்த் உத்தரபிரதேசம் முதல்வர் காலில் விழுந்ததை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்டபோது ’மிகவும் கேவலமாக இருக்கிறது, தமிழ்நாட்டின் மானமே போய்விட்டது, ’ஜெயிலர்’ படம் வெளியாவதற்கு முன்பு இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் ’ஜெயிலர்’ படம் சுத்தமாக ஓடி இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் உங்கள் பிறந்த நாளன்று ’லியோ’ படத்தின் உங்கள் கேரக்டர் ஸ்டில்ஸ் வருமா? என்று கேட்டதற்கு ’நான் பிறந்த நாளே கொண்டாடுவதில்லை’ என்று தெரிவித்தார். மேலும் சில கேள்விகளுக்கு அவர் காமெடியாக பதில் அளித்தார்

From Around the web